மகாவீர் ஜெயந்தியையொட்டிமதுபான கடைகளை மூட வேண்டும்


மகாவீர் ஜெயந்தியையொட்டிமதுபான கடைகளை மூட வேண்டும்
x

மகாவீர் ஜெயந்தியையொட்டி மதுபான கடைகளை மூட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு உத்தரவின்படி ஏப்ரல் மாதம் 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூடி வைக்க வேண்டும்.

அன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story