சாராயம் கடத்தல்; வாலிபர் கைது
சாராயம் கடத்தல்; வாலிபர் கைது
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் மூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஓருவர் தப்பி ஓடி விட்டார். இன்னொருவர் பிடிபட்டார். பின்னர் மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தபோது 2 லாரி டியூப்களில் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தும்பராம்பட்டு பகுதியை சேர்ந்த தம்பிதுரை(வயது 22), தப்பி ஓடியவர் செல்வராஜ் என்பதும் விற்பனைக்காக சாராயத்தை கடத்தி வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து தம்பிதுரையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளுடன் 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.