எரி சாராய லாரி கவிழ்ந்து விபத்து


எரி சாராய லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 2 July 2022 11:03 PM IST (Updated: 2 July 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே, எரி சாராயம் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்


கோவை அருகே, எரி சாராயம் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எரிசாராய லாரி கவிழ்ந்தது

ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு எரி சாராயம் ஏற்றிக்கொண்டு 4 லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்த லாரிகள் நேற்று காலை 6.30 மணி அளவில் கோவை-பாலக்காடு ரோட்டில் எட்டிமடை அருகே சென்றன. ஒன்றன் பின் ஒன்றாக லாரிகள் சென்றுகொண்டிருந்தன. அப்போது ஒரு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் லாரியல் இருந்து எரி சாராயம் சாலையில் ஆறாக ஓடியது. இதற்கிடையில் பின்னால் வந்த மற்றொரு லாரி கவிழ்ந்்து கிடந்த லாரியின் மீது மோதியது.

இதனைக்கண்ட மற்ற லாரி டிரைவர்கள் எரி சாராயம் தீப்பற்றி விடுமோ என்ற அச்சத்தில் உடனடியாக இதுகுறித்து கோவைப்புதூர் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு, சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை தூக்கி நிறுத்தினர்.

சாலையில் லாரி கவிழ்ந்து கிடந்ததால் கோவை-பாலக்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியை அகற்றிய பின்னர் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். விபத்து நடந்தது காலை நேரம் என்பதால் வெயில் இல்லை. இதனால் வெயிலினால் எரிசாராயம் தீப்பிடிதது எரியாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story