விஜயதசமியையொட்டி கிருஷ்ணகிரி அய்யப்பன் கோவிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி


விஜயதசமியையொட்டி கிருஷ்ணகிரி அய்யப்பன் கோவிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 Oct 2023 1:15 AM IST (Updated: 24 Oct 2023 10:39 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அய்யப்பன் கோவிலில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அய்யப்பன் கோவிலில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

வித்யாரம்பம் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரியில், சேலம் சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், விஜயதசமியையொட்டி "வித்யாரம்பம்" எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பெற்றோர்கள் தங்கள் குழந்தையை மடியில் அமர வைத்து, "ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ" என குழந்தையின் கையை பிடித்து அரிசியிலும், நெல்மணியிலும் எழுதினார்கள்.

கோவில் குருக்கள், குழந்தையின் நாக்கில் தங்க மோதிரத்தால், 'அ' என்றும் 'ஓம்' என்றும் எழுதி அட்சராட்பியாசத்தை தொடங்கி வைத்தனர். மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க எழுத்தாணியால் நாவில், "ஹரி ஸ்ரீ கணபதே நமஹ" என எழுதி ஆசிர்வாதம் செய்தார்.

எழுத கற்றுத்தந்தனர்

இதில், 20-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய உடையை அணிவித்து அழைத்து வந்திருந்தனர். இதேபோல், பள்ளியில் சேர்க்க தயாராக உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று அவரவர்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்து, தங்கள் குழுந்தைகளுக்கு அரிசியில் அ, க, என்ற எழுத்துகளை எழுத கற்றுத்தந்தனர்.

விஜயதசமியையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்றன.

1 More update

Next Story