தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி தொடங்கப்பட்டது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 4 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான எண்ணும்-எழுத்தும் திட்டத்தினை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து முதலாம் ஆண்டிற்கான 3 நாள் பயிற்சியை நேற்று தொடங்கியது. பெரம்பலூர் ஒன்றியத்தில் தந்தை ரோவர் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகணன், உதவி திட்ட அலுவலர் (தொடக்க நிலை) ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் தொடர்ந்திட, அனைத்து நிலை மாணவர்களும் செயல்பாடுகளில் பங்குபெற, படைப்பாற்றல் சிறந்து விளங்கிட, பேச்சுத்திறன் வளர்ந்திட, சக மாணவர்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய செயல்பாடுகள் பயிற்சியின் கருப்பொருளாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதிலட்சுமி, அருண்குமார், ஆசிரியர் பயிற்றுனர்கள், 4, 5-ம் வகுப்பில் உள்ள 96 தொடக்க நிலை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.