இலக்கிய மன்ற விழா


இலக்கிய மன்ற விழா
x

அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி தலைவர் சாந்தினிரமேஷ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பாலு வரவேற்றார். பொறுப்பாசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. 3-ம்வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் போட்டியில் கலந்து கொண்டு பேச்சு திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story