பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது; இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது -பிரதமர் மோடி
முதல்-அமைச்சட் ஸ்டாலினின் தோள்களை தொட்டு குலுங்கி குலுங்கி சிரித்து பேசிய பிரதமர் மோடி
Live Updates
- 11 Nov 2022 4:57 PM IST
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்! - பிரதமர் முன்னிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன; இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு; இதனை மேலும் வலிமைப்படுத்த புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது.
அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வி திட்டங்கள் உள்ளன, காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்களாக உள்ளன.
வட இந்தியர் அனைவரும் தமிழை கற்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி,மகாத்மா காந்தியை அரையாடை கட்டவைத்தது தமிழ் மண்.
யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி. அத்தகைய கல்வியை ஒன்றிய அரசு மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும். அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. எமர்சென்சியின் போது தான் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் என கூறினார்.
- 11 Nov 2022 4:42 PM IST
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார் பிரதமர் மோடி
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார் பிரதமர் மோடி
- 11 Nov 2022 4:16 PM IST
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர், கவர்னர் முதல்-அமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர், கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர்.
- 11 Nov 2022 4:04 PM IST
பிரதமர், கவர்னர் , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர்.
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர், கவர்னர் , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர்.
- 11 Nov 2022 3:50 PM IST
மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்த பிரதமர் மோடி!
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் காரில் இருந்து மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி!
- 11 Nov 2022 3:35 PM IST
ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி
மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி
- 11 Nov 2022 3:18 PM IST
பிரதமர் மோடி திண்டுக்கல்லுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் கிளம்பினார்
திண்டுக்கல்லுக்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், மழை இல்லாததால் ஹெலிகாப்டர்கள் மூலம் கிளம்பினார்
- 11 Nov 2022 2:56 PM IST
காந்தி கிராம பட்டமளிப்பு விழா பங்கேற்க பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார்
காந்தி கிராம பட்டமளிப்பு விழா பங்கேற்க பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார்
பிரதமரை வரவேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
மதுரை விமான நிலையத்தில் பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் 5 எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி ட் தரப்பில் எம்.எல்.ஏக்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு உள்ளிட்டோருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளீயாகி உள்ளது.