லைவ் அப்டேட்ஸ் : ஈபிஎஸ் தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் இன்று காலை தலைமை கழகத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிறுவையில் உள்ளது.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் இன்று காலை தலைமை கழகத்தில் நடைபெற்று வருகிறது.
Live Updates
- 27 Dec 2022 12:19 PM IST
அரசியல் போலி ஓபிஎஸ்: நத்தம் விஸ்வநாதன்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வதநாதன் பேசியதாவது:-
பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அரசியலில் போலி ஓபிஎஸ் என்றார்.
சட்டபேரவை தேர்தலைப்போல நாடாளுமன்ற தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள தயார் என அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடியிடம் மாவட்ட செயலாளர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.
- 27 Dec 2022 11:57 AM IST
ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்க கடும் எதிர்ப்பு
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-
பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்கள் மீண்டும் இணைக்க கூடாது. பழையன கழிந்தால் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க இருக்கட்டும். பன்னீர்செல்வம் அணியை மட்டுமின்றி அந்த அணிக்குப்போனவர்களையும் மீண்டும் இணைக்ககூடாது என்றார்.
- 27 Dec 2022 11:48 AM IST
அதிமுகவில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது மாவட்ட செயலாளர்கள் ஒருமித்த குரல்
அ.தி.மு.க.வில் எந்த சூழலிலும் ஓ.பி.எஸ். அணியினரை இணைக்க கூடாது எடப்பாடி கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமித்த குரல் கொடுத்தனர்.