அந்தியூர் சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனையானது.

கொங்கு காளை மாடு

அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இதற்கு ஈரோடு, பர்கூர், மேட்டூர், பண்ணவாடி, எடப்பாடி, கொளத்தூர், தர்மபுரி மற்றும் கர்நாடக மாநில பகுதியில் இருந்தும் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதில் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்துக்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.80 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.50 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.60 ஆயிரத்துக்கும் விலை போனது.

மொரா பசு மாடு

கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கும், ஆந்திரா மாநில பகுதியில் இருந்து வந்த மொரா பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும், பர்கூர் இன செவலை காளைமாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

பர்கூர் இன செவலை பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.35 ஆயிரத்துக்கும், சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.40 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, பெருந்துறை, கோபி, திருப்பூர், மேட்டுப்பாளையம், எடப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து சென்றனர்.


Next Story