அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾லட்சத்துக்கு விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾லட்சத்துக்கு விற்பனையானது.
கொங்கு காளைமாடு ஜோடி
அந்தியூரில் கால்நடைச் சந்தை நடைபெற்றது. இதற்கு மேட்டூர், பண்ணவாடி, தர்மபுரி, எடப்பாடி மற்றும் கர்நாடக மாநில பகுதியில் இருந்தும், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கால்நடைகள் கொண்டு வரப்பட்டன. இதில் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்திற்கும், அதிகபட்சம் ரூ.1லட்சத்து 75 ஆயிரத்திற்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும், நாட்டு பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.60 ஆயிரத்திற்கும், ஜெர்சி பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.45 ஆயிரத்திற்கும் விலை போனது.
பசு மாடு
சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.40 ஆயிரத்திற்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.65 ஆயிரத்திற்கும், பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், கன்றுக்குட்டி குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.15 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலைபேசி பிடித்துச் சென்றனர்.