அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடைச் சந்தை நேற்று கூடியது. இதற்கு ஈரோடு, மேட்டூர், தர்மபுரி, பண்ணவாடி, கொளத்தூர், எடப்பாடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை பிடித்து வந்திருந்தனர்.

இதில் காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.80 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.70 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.60 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.

எருமை மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.75 ஆயிரத்திற்கும், சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.40 ஆயிரத்திற்கும், ஜெர்சி பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.45 ஆயிரத்திற்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.15 ஆயிரத்திற்கும், பர்கூர் இன செம்மைநிற மாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனையானது.


Next Story