அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.
கொங்கு காளை மாடு ஜோடி
அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், ஈரோடு, எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், பண்ணப்பாடி, தர்மபுரி பர்கூர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வந்த விவசாயிகள் ஏராளமான கால்நடைகளை பிடித்து வந்திருந்தனர்.
இதில் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.80 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1லட்சத்து 50 ஆயிரத்துக்கும், நாட்டு பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.25ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.60ஆயிரத்துக்கும், சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.40 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
எருமை மாடு
ஜெர்சி பசு மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், பர்கூர் இன பசுமாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், பர்கூர் இன காளை மாடு ஜோடி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டி ஒன்று ரூ.5ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை போனது.
ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் கர்நாடகா, கேரளாவில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து சென்றனர்.