அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடிரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.
கொங்கு காளை மாடு ஜோடி
அந்தியூர் கால்நடை சந்தை நேற்று கூடியது. இதற்கு ஈரோடு, கோபி, பர்கூர், மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, எடப்பாடி, தர்மபுரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த விவசாயிகள் ஏராளமான கால்நடைகளை பிடித்து வந்திருந்தனர்.
இதில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் வரையும், காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரையும், நாட்டு பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரையும், ஜெர்சி பசுமாடு ஒன்று ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.40 ஆயிரம் வரையும், சிந்து பசு மாடு ஒன்று ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரையும் விலைபோனது.
எருமை மாடு
எருமை மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.70 ஆயிரத்திற்கும், பர்கூர் பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், கன்றுக்குட்டிகள் ஒன்று குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.15 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன.
ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்துச் சென்றனர்.