கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்


கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
x

பாளையங்கோட்டையில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருநெல்வேலி

இட்டமொழி:

ஒவ்வொரு ஆண்டும் கால்நடை சார்ந்த பொருள் உற்பத்தியை அளவிட கால்நடைகள் தொடர்பான கணக்கெடுப்பு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை கோடைகாலம், மழைக்காலம், குளிர்காலம் என மூன்று பருவங்களில் நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு பணி மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒன்றியங்களில் எடுக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக கால்நடைகள் கணக்கெடுக்கப்படுகிறது.அதன்படி கால்நடை பராமரிப்பு துறையால் கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நடப்பு 2023-24 ஆம் ஆண்டுக்கான மழைக்கால கால்நடை கணக்கெடுப்பு மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இம்மாதிரி கால்நடை கணக்கெடுப்பு அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை மற்றும் மானூர் ஒன்றியத்தில் கீழப்பாட்டம் மற்றும் அலங்காரபேரி ஊராட்சிகளில் நடந்து வரும் கணக்கெடுப்பு பணியை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் (சிறப்பு திட்டங்கள்) டாக்டர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நெல்லை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் தியோபிலஸ் ரோஜர், துணை இயக்குனர் டாக்டர் கலையரசி, உதவி இயக்குனர் டாக்டர் சுமதி மற்றும் கணக்கெடுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார். அப்போது டாக்டர் முருகன் உடன் இருந்தார். 1962 ஆம்புலன்ஸ் சேவை குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து செயல்படுத்திட அறிவுறுத்தினார்.


Next Story