சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருபுவனம் டாஸ்மாக் மதுபான கிடங்கு முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மதுபான மொத்த கிடங்கு அலுவலகம் உள்ளது. இங்கிருந்து தஞ்சை, நாகை மாவட்டங்களில் உள்ள 84 கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பப்படுகிறது. இங்கு லாரிகளில் மதுபெட்டிகளை ஏற்றி இறக்குவதற்கு 47 சுமை தூக்கும் பணியாளர்கள் உள்ளனர். நேற்று மதியம் கிடங்கு அலுவலகத்தின் வாயிலில் கூடிய சுமை தூக்கும் பணியாளர்கள் சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமை பணி தொழிலாளர்கள் சங்க தலைவர் ஜே.எம்.பிரபு, செயலாளர் டி.செல்வம், பொருளாளர் ஆர். ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்ற கிடங்குகளில் ஏற்றி உள்ளது போல் கூலியை உயர்த்த வேண்டும். குடிநீர் வசதி, கழிவறை வசதி, ஓய்வறை வசதி ஏற்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள கூலியை நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களிடம் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் துணைத் தலைவர்கள் கிள்ளிவளவன், தமிழ்செல்வன், ராஜசேகர் துணைச் செயலாளர் தர்மராஜ் மற்றும் குமரவேல் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story