சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் உள்ள குன்னம், மாதானம், ஆலங்காடு, கடவாசல், பழையபாளையம், எடமணல், அகர எலத்தூர், வடரங்கம், அளக்குடி உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியார் மயமாவதை கண்டித்தும், கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே எடுத்துச் செல்லக்கோரியும், நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு விடக்கூடாது என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். இதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.