தொழில் தொடங்க ரூ.4¼ கோடி கடனுதவி-144 பேருக்கு வழங்கப்பட்டது


தொழில் தொடங்க ரூ.4¼ கோடி கடனுதவி-144 பேருக்கு வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 1 March 2023 6:45 PM GMT (Updated: 1 March 2023 6:46 PM GMT)

சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் 144 பேருக்கு தொழில் தொடங்க ரூ.4 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரம் கடன் வழங்கபட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.:-

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்க வைத்து, தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் புதிய தொழில் முனைவோர்களை கண்டறிந்து, அவர்களை ஆற்றல்மிக்க தொழில் முனைேவார்களாக உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் அளித்து, பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற செய்து வருகிறார்கள்.

அதில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைபடுத்தும் திட்டம் ஆகியவைகள் மூலமாக பயன்பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்தும், தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான அரசு வழங்கும் அனைத்து மானியங்களை பெற்று பயன்பெறுவதற்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்திற்கு 28 பேருக்கு ரூ.2 கோடியே 76 லட்சம் இலக்கீடு பெறப்பட்டு, தற்போது வரை 12 பேருக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்து 38 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு 70 பேருக்கு ரூ. 56 லட்சம் இலக்கீடு பெறப்பட்டு, தற்போது வரை ரூ. 54 லட்சத்து 18 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு 189 பேருக்கு ரூ.5 கோடியே 46 லட்சம் இலக்கீடு பெறப்பட்டு, தற்ேபாது வரை 69 பேருக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்து 96 ஆயிரம் இலக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் 130 பேருக்கு இலக்கீடு பெறப்பட்டு, தற்போது வரை 39 பேர் பயன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story