சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகை
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகை-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
அருப்புக்கோட்டை
பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா எனப்படும் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் இந்த சிறப்பு நுண்கடன் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வங்கி மூலம் அவர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகையை வழங்கினார். இதில் 14 வியாபரிகளுக்கு ரூ.20 ஆயிரமும், 2 வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரமும் கடன் தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், நகர மன்ற துணைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், நகர செயலாளர் மணி, வங்கி அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.