பெட்ரோல் நிலையம் அமைக்க கடனுதவி


பெட்ரோல் நிலையம் அமைக்க கடனுதவி
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெட்ரோல் நிலையம் அமைக்க கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர் முதல்முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல் அல்லது டீசல் (ஒரு டேங்கர்) தொகை தாட்கோ மூலம் கடனாக வழங்கப்படும். மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நபர் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளரை (திட்டங்கள்) தொடர்பு கொள்ளலாம்.

இந்த திட்டத்திற்கு www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண் என அனைவரும் வருகிற 27-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story