மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி


மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி
x

சம்புவராயநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே சம்புவராயநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது.

சங்கத் தலைவர் வக்கீல் கே.சங்கர் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் கே.ஆனந்தன் வரவேற்றார்.

விழாவில் 5 மகளிர் குழுக்களுக்கு தனிநபர் கடனாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.

இதில் துணைத்தலைவர் பி.துரை, நிர்வாக குழு உறுப்பினர்கள் துரை மாமது, பி.விஜயரங்கன், எஸ்.பாஸ்கர், எஸ்.பாலமுருகன், எஸ்.சாந்தா, எ.சிவகாமி, சி.சுகந்தி, வி.சுகுணா, வி.சுஜாதா மற்றும் சங்க ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story