இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி


இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
x

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

விருதுநகர்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

உச்சவரம்பு

2023-24-ம் நிதியாண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் வியாபார நிறுவனங்கள் தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வழங்கவும், அதிகபட்ச வயது வரம்பு பொது பிரிவு ஆண்களுக்கு 35 வயதில் இருந்து 45 வயதாகவும், அனைத்து பிரிவு பெண்கள், சிறப்பு பிரிவினர்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர், முன்னாள் படை வீரர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு 45 வயதுக்கு பதிலாக 55 வயது வரை என உயர்த்தப்பட்டு தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மானியத்தொகை

அதன்படி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2023 -2024-ம் நிதி ஆண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.29 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் தற்போது 7 மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ரூ. 7 லட்சத்து 18 ஆயிரத்து 400 மதிப்பிலும், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 2 தொழில் முனைவோருக்கு ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 250 மதிப்பிலும், சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த 3 தொழில்முனைவோருக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 45, 350 மதிப்பிலும் என மொத்தம் 12 புதிய தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசின் மானியத்தொகை பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

வியாபார நோக்கம்

முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புதிய தொழில் தொடங்க கடனுதவி வேண்டி விண்ணப்பித்த இளைஞர்களுக்கு புதிய தொழிலுக்கான மானியத்துடன் கூடிய ரூ. 4 லட்சத்து 57 ஆயிரத்துக்கான கடன் உதவிக்கான ஆனைகளையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் வியாபார நோக்கத்திற்காக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story