1,144 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.46¾ கோடி கடன் உதவி
திருவாரூரில் 1,144 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.46 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டிலான கடன் உதவியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
திருவாரூரில் 1,144 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.46 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டிலான கடன் உதவியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
கடன் உதவி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருவாரூர் விளமலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் 1,144 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.46 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டிலான கடன் உதவியை வழங்கினர்.
அதிகாரிகள்
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, மகளிர் திட்ட இயக்குனர் வடிவேல், நகரசபை தலைவர் புவனப்பிரியா செந்தில், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், நகரசபை உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.