ஆன்லைன் ஆப் மூலமாக கடன்; மன உளைச்சலில் வினோத் குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை


ஆன்லைன் ஆப் மூலமாக கடன்;  மன உளைச்சலில் வினோத் குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை
x

கடன் செயலிகளில் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சென்னையைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

கடன் செயலிகளில் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சென்னையைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த வினோத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை மாடவாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். ஆன்லைன் செயலி கடன் பெற்று ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை விளையாடியதாக கூறபடுகிறது. ஆனால், பண நெருக்கடிக்கு உள்ளாகி மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

1 More update

Next Story