ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்- வருகிற 9-ந்தேதி நடக்கிறது


ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்- வருகிற 9-ந்தேதி நடக்கிறது
x

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

தற்செயல் தேர்தல்

ஈரோடு மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2020, 2021, 2022-ம் ஆண்டுகளில் நிரப்பப்பட்ட பதவியிடங்களில் இறப்பு, பதவி விலகல் காரணங்களினால் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரையில் ஏற்பட்ட 16 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்செயல் தேர்தல்கள் நடக்கிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானிசாகர், கோபி, மொடக்குறிச்சி, நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தூக்கநாயக்கன்பாளையம், தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், அம்மாபேட்டை, அத்தாணி ஆகிய பேரூராட்சிகளிலும் தேர்தல் நடக்கிறது.

இதில் சிங்கம்பேட்டை வார்டு எண் -2 (பொது), குப்பாண்டாம் பாளையம் வார்டு எண் 4 (பொது), பெரியபுலியூர் வார்டு எண் -3 (பட்டியல் இனத்தவர், பொது), தொப்பம்பாளையம் வார்டு எண் -3 (பொது), கோட்டுப்புள்ளாம் பாளையம் வார்டு எண் -3 (பொது), 46 புதூர் வார்டு எண் -1 (பொது), கெட்டிச்செவியூர் வார்டு எண் 10 (பட்டியல் இனத்தவர், பெண்), பொலவபாளையம் வார்டு எண் -5 (பட்டியல் இனத்தவர், பொது), கருக்குப்பாளையம் வார்டு எண் -6 (பொது, பெண்), உக்கரம் வார்டு எண் -6 (பொது), கணக்கம்பாளையம் வார்டு எண் -1 (பொது), நஞ்சைபுளியம்பட்டி வார்டு எண் -3 (பட்டியல் இனத்தவர், பொது), பெருமுகை வார்டு எண் -11 (பொது, பெண்), தலமலை வார்டு எண் -2 (பட்டியல் இனத்தவர், பொது) ஆகிய கிராம ஊராட்சிகளும், அம்மாபேட்டை வார்டு எண் -2 (பொது), அத்தாணி வார்டு எண் -3 (பொது) ஆகிய பேரூராட்சிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு 15 வாக்குச்சாவடிகள் மற்றும் 2 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 17 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 28-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 30-ந்தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.

அதைத்தொடர்ந்து ஜூலை மாதம் 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 12-ந்தேதி காலை 8 மணி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.


Next Story