தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x

தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை

தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 2-வது தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பாலையா நகர், புல் தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், அம்பேத்கர் நகர் 1, 2-வது தெரு, சுனாமி காலனி, ஓம்சக்தி நகர், பிரையன்ட் நகர் 10 முதல் 12-வது தெரு வரை, அண்ணாநகர் 4 முதல் 8-வது தெரு வரை, முத்தையாபுரம் துறைமுக ரோடு உப்பள பகுதி, கோயில் பிள்ளை நகர்

முள்ளக்காடு

முள்ளக்காடு நடுத்தெரு, ஒட்டநத்தம் கலப்பபட்டி, வேப்பங்குளம், மருதன்வாழ்வு, அய்யப்பபுரம், செக்காரக்குடி, வடக்கு ஆரைக்குளம், தெற்கு ஆரைக்குளம், குலசேகரநல்லூர், மகிழம்புரம், கே.பி. தளவாய்புரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story