போதை பொருட்கள் விற்ற 4 கடைக்கு பூட்டு
வந்தவாசியில் போதை பொருட்கள் விற்ற 4 கடைக்கு பூட்டு போடப்பட்டது.
திருவண்ணாமலை
வந்தவாசி கோட்டை மூலை, பழைய பஸ் நிலையம், குளத்துமேடு பகுதி, கே.எஸ்.கே. நகர் ஆகிய இடங்களில் புகையிலை பொருட்கள், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர் மற்றும் அலுவலர்கள் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது 4 கடைகளில் போதை பொருட்கள் விற்பது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் 4 கடைகளை பூட்டி நோட்டீஸ் ஒட்டினர்.
Related Tags :
Next Story