நாங்குநேரியில் கடையடைப்பு போராட்டம்
நாங்குநேரியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நாங்குநேரி:
நெல்லை- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள், நாங்குநேரி நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலையில் செல்வதால், நாங்குநேரி பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் நாங்குநேரி நகருக்குள் வந்து செல்ல வலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நாங்குநேரியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சேனை மகாராஜன் தலைமையில் ஏராளமானவர்கள் நாங்குநேரி உலகம்மன் கோவில் அருகில் நாற்கரசாலையில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். சாலைமறியலில் ஈடுபட முயன்ற 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story