பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்


பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்
x

கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ராணிப்பேட்டை

நெமிலி தாலுகா ஓச்சேரி மற்றும் கீழ்வீதி கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. அரசின் நல உதவி கேட்டு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர். விவசாயிகளும் பட்டா, சிட்டா பெறமுடியாமல் தவிக்கின்றனர். மேற்கண்ட கிராமங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நல உதவிகளை தங்கு தடையின்றி பெற துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story