குமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் 26-ந் தேதி நடக்கிறது
குமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் 26-ந் தேதி நடக்கிறது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் 26-ந் தேதி நடக்கிறது
சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான நம்பிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரைப்படி, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வருகிற 26-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் விபத்து இழப்பீடு, உரிமையியல், உரிமையியல் மேல் முறையீடு, செக் மோசடி, மணவிலக்கு தவிர்த்து குடும்ப நல வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இங்கு வழக்குகள் முடிப்பது சம்பந்தமாக வழக்காடுபவர்களோ அவர்களின் சார்பில் வக்கீல்களோ வருகிற 24-ந் தேதிக்குள் நாகர்கோவில் கோர்ட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடம் என்ற முகவரியிலோ, நேரடியாகவோ அல்லது 04652- 291744 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இதன்மூலம் நிலுவையில்உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.