மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 21 தொகுதிகளில் தி.மு.க நேரடி போட்டி


மக்களவை  தேர்தல்:  தமிழகத்தில் 21 தொகுதிகளில் தி.மு.க நேரடி போட்டி
x

காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளன.

சென்னை,

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீட்டை நிறைவு செய்துள்ளது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:

காங்கிரஸ் - 10

விசிக - 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2

மதிமுக - 1

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1

மக்கள் நீதி மய்யம் - 1 ராஜ்யசபா சீட்

இதில், காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மட்டும் நாமக்கல் தொகுதியில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.


Next Story