நீண்ட தூர ஓட்டப்பந்தயம்


நீண்ட தூர ஓட்டப்பந்தயம்
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:46 PM GMT)

ராமநாதபுரத்தில் நீண்ட தூர ஓட்டப்பந்தயம் வருகிற 7-ந் தேதி இருபால ருக்கும் நடக்கிறது.

ராமநாதபுரம்

ஓட்டப்பந்தயம்

மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையாக அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 7-ந்தேதி நடத்தப்படுகிறது. அதன்படி 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது. ஆண்கள் 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் 8 கி.மீ, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 கி.மீ, பெண்கள் 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் 5 கி.மீ, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கி.மீ. தூரத்திற்கு நெடுந்தூர ஓட்டப்போட்டி நடத்தப்படும்.

இந்த போட்டிகள் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். சாலை பிரிவில் 7-ந்தேதி காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்குபெறும் அனைவரும் உடற்தகுதி குறித்து சுயஉறுதிமொழி படிவம் தரவேண்டும். 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். ஆதார்கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார்கார்டு கொண்டு வர வேண்டும்.

பரிசுத்தொகை

இப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கப்படும்.

இதில், கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் உடல் தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயது சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்குள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பதிவுசெய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story