சோதனை சாவடிகளில்விடிய, விடிய வாகன தணிக்கை


சோதனை சாவடிகளில்விடிய, விடிய வாகன தணிக்கை
x
திருப்பூர்


குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கு மற்றும் ரேஷன் கடைகள், நேரடி கொள்முதல் நிலையம் ஆகிய இடங்களை கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் கரடிவாவி சோதனைச்சாவடி மற்றும் மடத்துக்குளம் சோதனை சாவடிகளில் திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, கிருஷ்ணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை விடிய, விடிய கனரக லாரிகளில் சோதனை நடத்தினார்கள். கேரள மாநிலத்துக்கு லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story