தொப்பூர் கணவாயில் பழைய பேப்பர் லோடு லாரி கவிழ்ந்து விபத்து-டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்


தொப்பூர் கணவாயில் பழைய பேப்பர் லோடு லாரி கவிழ்ந்து விபத்து-டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் பழைய பேப்பர் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி கவிழ்ந்தது

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு பழைய பேப்பர் லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ராமராஜ் (வயது 48) என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த கிளீனர் ஆனந்த் (46) உடன்வந்தார்.

இந்த லாரி நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சென்று கொண்டிருந்தது. அப்போது 2-வது வளைவில் திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதனால் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கி டிரைவர் ராமராஜ், கிளீனர் ஆனந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

போக்குவரத்து சீரமைப்பு

விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர், கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டது.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story