எம்.சாண்ட், மண் கடத்திய லாரி, டிராக்டர் பறிமுதல்
ஓசூர்:
சூளகிரி அருகே புக்கசாகரத்தில் இருந்து ஓசூருக்கு டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 4 யூனிட் எம்.சாண்ட் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாகலூர் அருகே கக்கனூரில் இருந்து பாகலூருக்கு டிராக்டரில் அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 1 யூனிட் மண் டிராக்டருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து பேரிகை மற்றும் பாகலூர் போலீசார், வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire