கடமலைக்குண்டு அருகே லாரி மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி
கடமலைக்குண்டு அருகே லாரி மோதியதில் ஓய்வுபெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பலியானார்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 70). இவர் திண்டுக்கல்லில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு ெசாந்தமான தோட்டம், கடமலைக்குண்டு அருகே அய்யனார்புரத்தில் உள்ளது.
இந்தநிலையில் இன்று அவரது தோட்டத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. தோட்டத்தின் முன்பு தேனி சாலையோரம் நின்றபடி இந்த பணிகளை மோகன்தாஸ் பார்வையிட்டார். அப்போது கடமலைக்குண்டுவில் இருந்து தேனி நோக்கி சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோகன்தாஸ் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மோகன்தாஸ் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்தாஸ் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான ராஜேஷ் (30) மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.