லாரி மோதி மின்கம்பம் சேதம்


லாரி மோதி  மின்கம்பம் சேதம்
x

லாரி மோதி மின் கம்பங்கள் சேதமடைந்தன

கோயம்புத்தூர்

அன்னூர்

விருத்தாசலத்தில் இருந்து கோவைக்கு மணல் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி நேற்று அதிகாலை கோவையை அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன்பாளையம் அருகே வந்து கொண்டு இருந்தது.

அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த லாரி, அங்கு சாலையோரம் இருந்த வணிக வளாக சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வணிக வளாக சுவர் மற்றும் அருகில் இருந்த மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ் டவசமாக உயிர்சேதம் ஏற்பட வில்லை. இது குறித்த தகவலின் பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசார ணை நடத்தினர். இதில், லாரி ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது.


Next Story