அனுமதியின்றி கூழாங்கற்களை ஏற்றி சென்ற லாரி டிரைவர் கைது


அனுமதியின்றி கூழாங்கற்களை ஏற்றி சென்ற லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே அனுமதியின்றி கூழாங்கற்களை ஏற்றி சென்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் அருகே புவியியல் மற்றும் சுரங்கத்துறை திருச்சி மண்டல பறக்கும்படையை சேர்ந்த உதவி புவியியலார் நாகராஜன் தலைமையில், சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் குமரிஅனந்தன, வேல்முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை-திருச்சி செல்லும் பைபாஸ் சாலையில் அய்யலூர் பிரிவு சாலையில் வேகமாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் நடைசீட்டு அனுமதியின்றி 9 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட 3 யூனிட் ரூ.8 ஆயிரத்து 550 மதிப்புள்ள கூழாங்கற்களை ஏற்றிச்சென்றது தெரியவந்தது. உடனே கூழாங்கற்களை, டிப்பர் லாரியுடன் பறிமுதல் செய்து பெரம்பலூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில் டிப்பர் லாரி டிரைவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா பாலகொல்லை, நடியப்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் மற்றும் விருத்தாசலம் தாலுகா ஆலடியை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிரைவர் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.


Next Story