மாட்டுத்தாவணி பஸ் நிலைய பகுதியில் கழிவுநீரை கொட்டிய லாரி டிரைவர் கைது


மாட்டுத்தாவணி பஸ் நிலைய பகுதியில்  கழிவுநீரை கொட்டிய லாரி டிரைவர் கைது
x

மாட்டுத்தாவணி பஸ் நிலைய பகுதியில் கழிவுநீரை கொட்டிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் தனியார் கழிவு நீர் அகற்றும் வாகனம் சம்பவத்தன்று வந்தது. அந்த வாகனம் மாநகராட்சி அனுமதியின்றி அந்த பகுதியில் கழிவு நீரை கொட்டியது. இதுகுறித்து மாநகராட்சி உதவி என்ஜினீயர் ரிச்சர்ட்பால் (வயது 43) மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த தனியார் கழிவுநீர் அகற்றும் லாரியை கைப்பற்றி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் புதூர் காந்திபுரத்தை சேர்ந்த அருண்(29) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி கழிவுநீரை கொட்டியதாக அவரை கைது செய்து, அந்த கழிவு நீர் லாரியை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story