லாரி டிரைவர் தற்கொலை

லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
சிவகாசி
திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 45). இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். பொன்ராஜ் லாரி டிரைவராகவும், செல்வராணி அங்கன்வாடியிலும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் செல்வராணி கடந்த 10 மாதத்துக்கு முன்னர் நர்ஸ் பயிற்சிக்காக சிவகங்கை மாவட்டம் பூவந்திக்கு சென்று விட்டார். குழந்தைகள் உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் பொன்ராஜ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் சம்பவத்தன்று பொன்ராஜ் வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், பொன் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






