லாரி மோதி மின்கம்பம் சேதம்


லாரி மோதி மின்கம்பம் சேதம்
x

கறம்பக்குடி அருகே லாரி மோதி மின்கம்பம் சேதம் அடைந்தது.

புதுக்கோட்டை

மின்கம்பம் சேதம்

கறம்பக்குடியிலிருந்து குளந்திரான்பட்டு செல்லும் சாலையில் தனியார் சிமெண்டு விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்டு விற்பனை நிலையத்திற்கு கரூரிலிருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டு- நரங்கியப்பட்டு சாலையில் லாரி சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

இதில் மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது. இதைக்கண்டு அப்பகுதியில் வாகனங்களில் சென்றவர்கள், குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்ததால் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

மின்சாரம் துண்டிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைந்து கிடந்த மின்கம்பம் மற்றும் அறுந்துகிடந்த வயர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மின்கம்பம் உடைந்ததால் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story