லாரி மோதி உயர்அழுத்த மின்கம்பி அறுந்தது; ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்


லாரி மோதி உயர்அழுத்த மின்கம்பி அறுந்தது; ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்
x

ஆடுதுறை அருகே, ரெயில்வே கேட் பகுதியில் லாரி மோதி உயர்அழுத்த மின்கம்பி அறுந்தது. இதனால் ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

ஆடுதுறை அருகே, ரெயில்வே கேட் பகுதியில் லாரி மோதி உயர்அழுத்த மின்கம்பி அறுந்தது. இதனால் ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

ரெயில்வே கேட்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை - தரங்கம்பாடி சாலையில் உள்ள ெரயில்வே கேட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் இந்த வழியாக கும்பகோணத்தில் இருந்து மங்கநல்லூருக்கு டீசல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக ெரயில்வே கேட்டில் லாரி மோதியது. இதனால் ெரயில்வே லைன் மேலே உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் தீப்பொறி ஏற்பட்டு அறுந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக உயா் மின்னழுத்த கம்பிக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.

பயணிகள் அவதி

இதனால் சிக்னல் கிடைக்காமல் கும்பகோணம்- மயிலாடுதுறை இடையே வந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக கும்பகோணம், மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறை- திருச்சி், திருப்பதி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர்- மயிலாடுதுறை, திருச்சி - மயிலாடுதுறை ஆகிய பயணிகள் ரெயில்கள் மற்றும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

டீசல் என்ஜின்

நீண்ட நேரம் ரயில்கள் புறப்படாமல் நின்றதால் பல பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி ஆட்டோ, டாக்சி பிடித்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.இதைத்தொடர்ந்து ெரயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்துக்குவந்து உயர் அழுத்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு 11 மணிக்கு தொடங்கிய பணி நீண்ட நேரம் நடைபெற்றதால் ரயில்களை இயக்குவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு டீசல் என்ஜின் வரவழைக்கப்பட்டு அதன் உதவியோடு ஆடுதுறை, குத்தாலம் பகுதியில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களை இயக்கும் பணியை ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டனர்.

3மணி நேரம் தாமதம்

நேற்று அதிகாலை 5 மணி வரை சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது. லாரி மோதி உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் நேற்றுமுன்தினம் இரவு இந்த மார்க்கத்தில் சென்ற அனைத்து ரயில்களும் சுமார் 3 மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை ரயில்வே போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story