வீட்டுக்குள் லாரி புகுந்தது; 2 பேர் படுகாயம்
கபிஸ்தலம் அருகே வீட்டுக்குள் லாாி புகுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே வீட்டுக்குள் லாாி புகுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வீட்டுக்குள் புகுந்த லாரி
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் ஊராட்சி சீதா லட்சுமிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவிகா(வயது49). துப்புரவு தொழிலாளியான இவர் தன் வீட்டின் முன்பு 15 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கொள்ளிடம் ஆற்றில் குவாரிக்கு மணல் ஏற்றுவதற்காக, அதிவேகமாக அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அப்போது திடீரென அந்த லாரி வீட்டுக்குள் புகுந்தது. இதில் குடிசை வீடு முழுவதும் சேதம் ஏற்பட்டது.மேலும் வீட்டில் இருந்த தேவிகா, லாரி டிரைவர் திருவாரூர் மாவட்டம், வடகண்டம் பகுதியைச் சேர்ந்த கோகுல்(26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் தேவிகா வளர்த்து வந்த ஒரு ஆடும் உயிரிழந்தது.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய தேவிகா மற்றும் லாரி டிரைவர் கோகுல் ஆகிய இருவரையும் மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.