அரளை கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
அரளை கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டனர்.
தோகைமலையில் பகுதியில் லாரிகளில் அனுமதியின்றி அரளை கற்கள் ஏற்றி செல்லப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில்
குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கழுகூர் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில்
மணப்பாறை அருகே பழையகோட்டை பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கருப்பூர் பகுதிக்கு அனுமதியின்றி அரளை கற்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அரளை கற்களுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அரளை கற்களை கடத்தி வந்ததாக லாரி உரிமையாளர் தோகைமலை அருகே உள்ள வெள்ளப்பட்டியை சேர்ந்த பரந்தாமன், லாரி டிரைவர் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா (வயது 51), ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து, கருப்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.