அந்தியூர் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி


அந்தியூர் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி
x

லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்

ஈரோடு

அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் ஏரி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சொக்கப்பன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 20). டிப்ளமோ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து உள்ளார். தற்போது கட்டிட தொழிலாளியாக வேலைக்கு சென்றுவந்தார்.

சம்பவத்தன்று இவர் வேைல முடிந்து இரவு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அந்தியூர்- பவானி ரோட்டில் உள்ள சின்ன பருவாச்சி அருகே சென்றபோது எதிரே வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்


Related Tags :
Next Story