திண்டுக்கல் அனுமந்தநகரில் கழிவுநீர் ஓடையில் சிக்கிய லாரி


திண்டுக்கல் அனுமந்தநகரில் கழிவுநீர் ஓடையில் சிக்கிய லாரி
x

திண்டுக்கல் அனுமந்தநகரில் கழிவுநீர் ஓடையில் சிக்கி லாரி சாய்ந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அனுமந்தநகருக்கு நேற்று கிராவல் மணலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை முள்ளிப்பாடியை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார். ரெயில்வே மேம்பாலம் அருகே, சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் ஓடை பகுதியை லாரி கடந்தது. அப்போது திடீரென ஓடையின் மேற்பகுதியில் இருந்த சிமெண்டு தளம் உடைந்து பள்ளம் ஏற்பட்டது.

இதில் லாரியின் பின் சக்கரம் சிக்கி கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதி வழியாக எந்த வாகனங்களும் ெசல்ல முடியவில்லை. இந்த விபத்தில் டிரைவர் கண்ணன் காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Related Tags :
Next Story