லாரி கவிழ்ந்து 3 பேர் காயம்
ராசிபுரம் அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் காயம் அடைந்தனர்.
ராசிபுரம்
மோகனூரில் இருந்து வீட்டு சாமான்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்னைக்கு சென்றது. அந்த லாரி ராசிபுரம் அருகே உள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகளூர்கேட் அருகே வந்தபோது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் சென்ற மோகனூரை சேர்ந்த சரவணன் (வயது 35), கணேசன் (31), கவிராஜ் (17) ஆகிய 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினர். லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire