செம்மண் கடத்திய லாரி பறிமுதல்


செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
x

கணியம்பாடி அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

கணியம்பாடி அருகே நாகநதி கிராமத்தில் வேலூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் அந்த வழியாக வந்த லாரியை மடக்கினர். இதனைப் பார்த்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஒடிவிட்டார்.

பின்னர் போலீசார் சோதனை செய்தபோது, அதில் செம்மண் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story