சூளை மண் கடத்திய லாரி பறிமுதல்


சூளை மண் கடத்திய லாரி பறிமுதல்
x

சூளை மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

சூளை மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆரணியை அடுத்த கல் பூண்டி கிராமம் அருகே நேற்று காலை மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் மகப்பூகான் மற்றும் அலுவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அந்த வழியாக வந்த ஒரு லாரியை மறித்து சோதனையிட முயன்றபோது அதில் இருந்த லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். அதிகாரிகள் சோதனை செய்தபோது அனுமதி இன்றி சூளை மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைக்கப்பட்டது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்கு பதிவு செய்து லாரி உரிமையாளர் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story