கிருஷ்ணகிரி மாவட்டத்தில்குட்கா, லாட்டரி சீட்டுக்கள் விற்ற116 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குட்கா, லாட்டரி சீட்டுக்கள், கஞ்சா விற்ற 116 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீவிர சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனையை தடுப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, போச்சம்பள்ளி, கந்திகுப்பம், மகராஜகடை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம், கே.ஆர்.பி டேம், மத்திகிரி, பாகலூர், பேரிகை, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கைது
இதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 53 பேரும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்ற 21 பேரும், பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற 39 பேரும், கஞ்சா விற்ற 3 பேர் உள்பட 116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.