லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் திடீர் சோதனை
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்க ளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்க ளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மார்ட்டின் வீடு
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு கோவை துடியலூரில் உள்ளது. மேலும் அங்கு அவருக்கு சொந்தமான ஓமியோபதி கல்லூரியும் செயல்படுகிறது. இவர் மீது ஏற்கனவே அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரளாவில் இருந்து கார்களில் நேற்று கோவை வந்தனர். பின்னர் அவர்கள், திடீரென்று மேட்டுப்பாளையத்தில் உள்ள மார்ட்டின் கம்பெனியில் அதிரடி சோதனை நடத்தினார்.
அமலாக்கத்துறை சோதனை
இதையடுத்து மார்ட்டினுக்கு சொந்தமான வீடு உள்பட 3 இடங் களில் காலை 11 மணி முதல் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது வீடு, அலுவலகங்களின் வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. வெளி ஆட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப் பட வில்லை. மேலும் வேறு யாரும் நுழைய முடியாதபடி பாது காப்பு போடப்பட்டு சோதனை நடைபெற்றது.
பணப்பரிமாற்றம்
வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், பணபரிமாற்றம் தொடர்பாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் உள்ள கணினி, அதில் பதிவான விவரங்கள், பண பரிமாற்றம், உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வில்லை. அமலாக்கத்துறையினரின் திடீர் சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.